வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

நேசமிக்க மலேசியா

முப்புறம் கடல் சூழ்ந்து, நாற்புறமும் செம்மையாய்ச் செழிப்புற்று உலக வரைபடத்தில் கடுகளவே தோன்றினாலும், உலகளவில் பிரசித்தி பெற்றது நம் மலேசிய மலைத் திருநாடு. மலேசியா வளர்ந்த மற்றும் வளமான நாடு. மலேசியா பல்வேறு இனங்கள் கொண்ட நாடு.

தீவிரவாதம்,அரசியல் நிலைத்தன்மை, போதிய இயற்கை வளங்கள் இன்மை,உள்நாட்டுக் குழப்பங்கள் என உலகின் பல்வேறு நாடுகள் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய உலக அரங்கில் மலேசியா ஒரு சுவர்ணபூமியாக நிலைப்பெற்றுவருகிறது.மேலும்,பல்லின மக்கள் வெவ்வேறு கலைக் கலாச்சாரங்களைக் கொண்டிருப்பினும் பிணக்கம் இன்றி இணக்கமாக வாழ்கின்றனர்.

இன்றிருக்கும் உயிர் நாளை இருக்குமா என்று தினம் தினம் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் பல நாட்டு மக்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், பல தனிச் சிறப்புகளைக் கொண்ட இந்நாட்டில் பிறக்க வைத்த இறைவனுக்கும் ஆயிரம் கோடி நன்றி . இந்நாட்டில் வாழும் பிற இனத்தவர்களும்,உடன் பிறப்புகளைப் போன்றவர்களே என உணர்கின்றனர்.


 'ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்',என்ற பழமொழியானது குடும்பத்திற்கு மட்டுமல்லாது நாட்டிற்கும் பொருந்தும் என்பதால் வேற்றுமைகளைக் களைந்து பிற இனத்தவருடன் சகிப்புத்தன்மையுடனும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் மக்கள் வாழ்கின்றனர்.

சமயம்,உணவு,உடை,நம்பிக்கை, வாழ்க்கை முறை என பவ்வேறு கூறுகளால் வேறுபட்டுள்ள மலேசிய மக்கள்,'தேன் சுரக்கும் பூ வடா நம் தேசமக்கள் நெஞ்சமே' என்பதற்கொப்ப  இனிய பண்புகள் கொண்ட மக்களாகத் திகழ்கின்றனர்.

நேசமிக்க மலேசியா

1 கருத்து:

  1. Coin Casino | Free £10 Bonus
    Coin casino bonus codes 2021 : 인카지노 play at Coin Casino and claim your welcome bonus. Find out more 샌즈카지노 and get 카지노사이트 your latest bonuses at Coin Casino and get a 100%

    பதிலளிநீக்கு