இவ்வுலகத்தில் மானிடர்களாக பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்கும் பண்பு உயிரினும் மேலாக கருதப்படுகிறது. பண்பற்றவன் மிருகங்களாகவும் முழுமையற்றவனாகவும் கருதப்படுகிறான். பண்பு என்றால் என்ன? மரியாதைச் சொற்களைப் பயன்படுத்திப் பேசுதல், கனிவுடன் பேசுதல், அடக்கமாக நடந்து கொள்ளுதல், விட்டு கொடுத்து பேசுதல், நடந்து கொள்ளுதல், பெரியவர்களை மதித்தல் போன்றவையாகும்.
“ இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று ”.
நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும் போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும் என்கிறார் பொய்யாமொழி புலவர் திருவள்ளுவர். கனிவான பேச்சு, மரியாதையானப் பேச்சு மற்றும் அடக்கமான பேச்சையே அனைவரும் விரும்புகின்றனர். ஒருவரின் பேச்சை வைத்துதான் அவரின் குணாதிசயங்கள் அளக்கப்படுகின்றன. பண்பான பேச்சு ஒருவரின் குணத்தைப் பிரதிபலிக்கின்றது.
இளமையில் கல்வி, சிலைமேல் எழுத்து என்பதற்கொப்ப இப்பண்பான பேச்சு சிறுபிராயத்திலேயே குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட வேண்டும். சிறு குழந்தைகளாய் இருக்கும் போதே பெற்றோர் தமது குழந்தைகளுக்குப் பண்பான பேச்சை விதைக்கப்பட வேண்டும். பெற்றோர் தமது பிள்ளைகளிடம் உரையாடும் பொழுது பண்பான சொற்களைப் பயன்படுத்தியும் சரியான முறையிலும் பேச வேண்டும். வீட்டில் மட்டும் இல்லாது வெளியில் மற்றவரிடம் உரையாடும் பொழுதும் தம் பிள்ளைகள் பண்பானச் சொற்களைப் பயன்படுத்திப் பேசவும் வழிவகுப்பதும் பெற்றோர்களின் தலையாய கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பெற்றோரைத் தவிர்த்துப் ப் பள்ளி மாணவரிடையே இப்பண்பானது தொடர்ந்து கற்று தர வேண்டும். மாணவர் சக நண்பரோடு உரையாடும் பொழுதும் பழகும் பொழுதும் பண்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் பண்பாக பேசவும் நடந்துக் கொள்வதையும் மேம்படுத்தும் பொருட்டு பல நடவடிக்கைகளையும் அவ்வப்போது பள்ளியிலும் நடத்தலாம். எடுத்துக்காட்டுக்கு நன்னெறி பாடவேளையின் பொழுது மாணவரின் பண்பான பேச்சை சோதிப்பது, ஒரு சூழலை வழங்கி பண்பான சொற்களைப் பயன்படுத்தி உரையாடலை நிகழ்த்துவது போன்றவைகளாகும்.
இன்றைய மாணவர்கள்தான் நாளைய தலைவர்கள். எனவே, இம்மாணவர்கள் நாளைய தலைவர்களாக உருவாவதற்கு, கல்வி மட்டுமல்லாது சிறந்த பண்பான பேச்சும் அவசியம் .

0 கருத்துகள்:
கருத்துரையிடுக