வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

நமது பாரம்பரிய உணவுகள்

 பல்லின மக்களைக் கொண்ட மலேசியா பல்வகை கலாச்சாரம், பண்பாடு மற்றும் உணவுகளையும் தாங்கி வருகிறது. அவ்வகையில், மலாய்க்காரர்களின் பாரம்பரிய உணவுவகைகளில் லெமாங் பிரசித்திப்பெற்றது. பெருநாள் காலங்களில் அனைத்து வீடுகளில் கண்டிப்பாக லெமாங் இருக்கும். . லெமாங்  பூலூட் அரிசியால் தாரிக்கப்படும் உணவாகும். மூங்கில் கொண்டு நெருப்பில் வேகவைத்து தயாரிக்கப்படும் லெமாங் வட்டவட்டமாக வெட்டப்பட்டு வாட்டிய மீனுடன் பறிமாறப்படும். கிழக்கு மலேசியாவில் லெமாங் ரெண்டாங்  அல்லது செருண்டிங்குடன் பறிமாறப்படும். சைவர்கள் லெமாங்கை ருசி பார்க்க வேண்டுமென்றால் கச்சான் குழம்புடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

இந்தியர்களின் பாரம்பரிய உணவுகளின் தோசை மிகவும் முக்கிய உணவாகும்.  தோசை என்பது உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் தட்டையான வட்ட வடிவான பதார்த்தம் ஆகும். மலேசியர்கள் மத்தியில் தோசை புகழ்பெற்ற உணவாக விளங்குகிறது. தோசையைச் சட்னியுடனும் கோழிக்கறியுடனும் சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இப்பொழுது தோசைகளில் பலவகை உள்ளன. அவை நெய் தோசை, வெங்காயத் தோசை, மசாலா தோசை, வாழைப்பழத் தோசை மற்றும் பல. தீபாவளி அன்று தோசைகள் இல்லாத இல்லங்களே இருக்காது. தோசையை இந்தியர்களைவிட மற்ற இன மக்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர்.


சீனர்களின் பாரம்பரிய உணவுகளில் பலவகைகள் இருந்தாலும் மலேசியர்கள் விரும்பி உண்ணும் உணவு வன்தான் மீ ஆகும். வன் தன் மீயை நன்றாக சூப்பில் கொதிக்க வைத்து அதன் மேல் மணம் வீசும் பச்சை இலைகள் கொண்ட கீரைகளைத் தூவி பரிமாறுவார்கள். இந்த உணவில் அதிகம் காரத்தைச் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். வன் தான் மீயைச்  சூப்புடன் உண்ணடால் மிகவும் சுவையாக இருக்கும். வெயில் காலங்களின் இந்த வன் தான் மீயை உண்பது உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். இந்த வன் தான் மீ சூப்பில் மீன் மற்றும் நன்கு கொத்திய இறைச்சியை அதிகம் பயன்படுத்துவார்கள் வன்தான்மீ சைவமாகவும் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மலேசிய மக்கள் பல்வகை உணவின் சுவைகளை சுவைத்து மகிழ்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக